Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுக்க கோரிக்கை…. மனு கொடுத்த பொதுமக்கள்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஏராளமான பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் மைதீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பீடி கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். இதே போல் அபகுதில் வசிக்கும் ஏராளமான பொதுமக்களும் அந்த கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் மைதீன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒரு மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறுவதாவது, நாங்கள் ஒரு தனியார் பீடி கம்பெனியில் வேலை பார்த்தோம். ஆனால் அங்கு எங்களுக்கு ஏராளமான சம்பள பாக்கி உள்ளது. எனவே எங்களுக்கு உரிய பணத்தை மீட்டு தரும்படி கேட்டுக்கொள்கிறோம் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆயன்குளம் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் எங்கள் பகுதியில் குடிநீர், சாலை வசதி உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாததால் அரசு நிறைவேற்றி தரவேண்டும் என கூறினர். இதேபோல் பாளையங்கோட்டை அருகிலுள்ள கீழ தோணிதுறை கிராமத்தில் வசிக்கும் முருகன் என்பவர் நான்கு சக்கர வண்டியில் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார், அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனக்கும் எனது உறவினர்களுக்கும் ஏற்பட்ட பிரச்சினையில் என்னை சரமாரியாக அடித்து நடக்க முடியாமல் ஆக்கிவிட்டார்கள்.

இதனால் நான் சுயநினைவு இல்லாமல் மருத்துவமனையில் இருக்கும்போது பனை மரத்திலிருந்து தவறி விழுந்ததாக காவல்துறையினர் கூறி அவர்களை தப்பித்து விட்டார்கள். இதனையடுத்து எனக்கு சுயநினைவு திரும்பிய பிறகு தான் என்னை தாக்கியவர்களின் நினைவு வந்தது. எனவே காவல்துறையினரிடம் இதுகுறித்து புகார் அளித்தும் அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே என்னை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் முருகன் கூறியிருந்தார்.

Categories

Tech |