சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மைதானத்தில் இருந்த ரசிகர்கள், முகம்மது சிராஜை இன ரீதியாக இழிவு படுத்தினர்.
சிட்னியில், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இந்நிலையில் மைதானத்தின் பவுண்டரி எல்லையில் இருந்த முகமது சிராஜை அங்கிருந்த ரசிகர்கள் இனரீதியாக இழிவு படுத்தி உள்ளனர். அதைக்கேட்ட முகமது சிராஜை அணி கேப்டன் ரஹானேவிடம் இது பற்றி கூறினார்.
Play stopped at the SCG for more an eight minutes after allegations of abuse from the crowd #AUSvIND https://t.co/lae1ODNmwF
— cricket.com.au (@cricketcomau) January 10, 2021
ரஹானா உடனடியாக கல நடுவரிடம் இது குறித்து புகார் அளித்தார். அதன்பின் மைதானத்தின் பாதுகாப்பு ஊழியர்கள் முகமது சிராஜை இனரீதியாக விமர்சித்த 6 ரசிகர்களை மைதானத்திலிருந்து வெளியேற்றினர்.இதனால் அங்கு ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.மேலும் இச்சம்பவம் குறித்து நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.