Categories
மாநில செய்திகள்

“ஏன் இப்படி குரங்கு போல் வரீங்க”….. செய்தியாளர்களை விலங்கோடு ஒப்பிட்டு விமர்சித்த அண்ணாமலை….!!!!

தமிழகத்தில் திமுக அரசு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று கூறி தமிழக பாஜக சார்பில் நேற்று தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் 60 இடங்களில் நடைபெற்றது. அதன்பிறகு கடலூர் ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், இந்தி எதிர்ப்பு என்பது தமிழ் வேண்டும் என்பதற்காக அல்ல, ஆங்கிலம் வேண்டும் என்பதற்காக தான். ஆங்கிலத்தை தமிழ்நாட்டு மொழியாக்க வேண்டும் என்பதற்காக தான் இந்தியை திமுக எதிர்கிறது. திமுக ஒரு பித்தலாட்டக் கட்சி என்றும் தமிழை வைத்து வியாபாரம் செய்யும் கட்சி திமுக என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். அதனை தொடர்ந்து செய்தியாளர் சந்தித்து அண்ணாமலை பேசினார். அப்போது அவரிடம், கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உங்களிடம் சில ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்ததற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கண்டனம் தெரிவித்தார்.

அதுமட்டுமில்லாமல் தேசிய புலனாய்வு முகமை முதலில் விசாரிக்க வேண்டிய நபர் நீங்கள் தான் என்று கூறி இருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்க மறுத்த அண்ணாமலை, ஊர்ல இருக்கிற நாய், பேய், சாராயம் விற்கிறவனுக்கு எல்லாம் நான் பதில் சொல்லனுமா?. மரத்தின் மீது குரங்கு தாவுவதை போல ஏன் சுற்றி சுற்றி வருகிறீர்கள் என்று ஒருமையில் பேசி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இது அங்கிருந்த பத்திரிகையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு முன்னதாக கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது போலீசுக்கு முன்பே பாஜக தலைவர் அண்ணாமலை சில தகவல்களை வெளியிட்டது ஏன் என கேள்வி எழுப்பிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தேசிய புலனாய் முகமை முதலில் விசாரிக்க வேண்டிய நபர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தான் என்று கூறினார். அமைச்சர் செந்தில் பாலாஜி வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு எதிர்வினையாற்றாமல் கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களை குரங்குடன் ஒப்பிட்டு பேசிய அண்ணாமலைக்கு ஊடகத்துறையினரும், அரசியல் தலைவர்களும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |