ரக்ஷாபந்தனுக்கு ஏகப்பட்ட கதைகள் இருக்கிறது அதில் ஒரு கதை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
வட மாநிலங்களில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ரக்ஷாபந்தனும் ஒன்று. ரக்ஷபந்தன் என்று சொல்லும்போதே அது அக்கா, தம்பி அண்ணன், தங்கை உள்ளிட்ட உறவுகளுக்கான திருவிழா என்றுதான் பார்க்கிறோம்.இதற்கு பல கதைகள் கூறப்படுகிறது அதில் ஒரு கதையில் இந்த செய்தித் தொகுப்பில் காண்போம், இந்துத்துவத்தின் கதை படி, கடவுளான எமனுடைய தங்கையான யமுனா, எமனுக்கு கையில் ராக்கி கட்டினார்.
ஒவ்வொரு சரவண பூர்ணிமா அன்றைக்கும் இவர் எமன் கையில் கட்டும் அந்த ராக்கி எமனை சந்தோஷப்படுத்தியது. அப்போது அவர் கூறிய ஒன்று, யாரெல்லாம் யமுனா கையில் இருந்து ராக்கி பெற்றுக் கொள்கிறார்களோ? அவர்கள் மரணமே இல்லாத வரத்தைப் பெறுவீர்கள் என்று கூறியுள்ளார். அன்றையிலிருந்து தங்கைகள் அண்ணன்களின் ஆயுள் காலம் நீடிக்க வேண்டும் என்பதற்காக இந்த ராக்கி கயிறை கட்டுவதுண்டு. இது ஒரு அளவு கடந்த பாசத்தை காட்டுவதற்காக கட்டப்படும் கயிராக பார்க்கப்படுகிறது.