Categories
ஆன்மிகம் இந்து

எலுமிச்சை தொங்கவிடுவது திருஷ்டிக்காகவா.? ஒளிந்திருக்கும் அறிவியலை அறிவோம்..!!

கண் திருஷ்ட்டி என்று வீட்டு வாசலில் தொங்கவிடப்படும் எலுமிச்சையில் இருக்கும் அறிவியலை பற்றி அறிவோம்..!

நம் முன்னோர்களின் பல அறிவியல் சார்ந்த செயல்கள் மூடநம்பிக்கையாக சித்தரிக்கப்பட்டு இன்று நாமும் அதை மூட நம்பிக்கை என்று எண்ணத் தொடங்கி விட்டோம். அதில் ஒன்றுதான் இன்றும் தமிழகத்தில் பல வீட்டு வாசலில் தொங்கிக் கொண்டிருக்கும் எலுமிச்சை பழம்.

பெரும்பாலான மக்கள் இதை வீட்டு வாசலில் தொங்க விட்டால் கண் திருஷ்டி நீங்கும் என்று நினைத்து தொங்க விடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் எலுமிச்சையும், மிளகாயையும், தேங்காயையும் வீட்டு வாசலில் தொங்க விட்டதற்கு பின் ஒரு மிகப்பெரிய அறிவியல் ஒளிந்துள்ளது.

நம் முன்னோர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் மின்சாரம் என்பதெல்லாம் கிடையாது, இரவு நேரங்களில் அவர்கள் வெளியில் செல்ல வேண்டும் என்றால், ஒரு சிறு விளக்கின் உதவியோடு தான் செல்வார்கள். பல நேரங்களில் விளக்கு இல்லாமலும் கூட செல்வார்கள்.

அப்படி இருளில் செல்லும் பொழுது அவர்களை ஏதேனும் விஷப்பூச்சி பாம்பு கடித்து விட்டால், அவர்களுக்கு அந்த சமயத்தில் முதலுதவி என்பது அவசிய தேவை அல்லவா, அப்படிப்பட்ட பதட்டமான சூழ்நிலையில் அவர்களின் வீட்டு வாசலில் தொங்கிக் கொண்டிருக்கும், எலுமிச்சையும், மிளகாயும் தான் அவர்களுக்கு முதலுதவி பெட்டகமாக கைகொடுத்தது உதவும்.

கையிலோ அல்லது காலிலோ கடிபட்டு இருந்தால் முதலில் எலுமிச்சை, மிளகாய் போன்றவை தொங்கிக்கொண்டிருக்கும் கயிற்றை அவிழ்த்து அதை கடிபட்ட இடத்திற்கு சிறிது மேலே இருக்கமாக கட்டி விடுவார்கள். இதனால் விஷம் தலைக்கு ஏறாமல் இருக்கும். அதன் பிறகு அது விஷப் பூச்சிகளின் கடி அல்லது சாதாரண பூச்சிகளின் கடி என்பதை அறிய, மிளகாயை எடுத்து தின்று பார்த்தால் தெரிந்துவிடும்.

மிளகாயின் காரம் தெரியவில்லை என்றால் அது விஷப் பூச்சிகளின் கடி என்றும் தெரிந்தால் அது சாதாரண பூச்சியின் கடி என்றும் காரணம் அறிவார்கள். கடிபட்டதால் உண்டாகும் களைப்பைப் போக்குவதற்காக எலுமிச்சை சாரை நன்கு பிழிந்துவிட்டு குடிப்பார்கள். இதனால் அவர்களுக்கு உடலில் உடனடி  எனர்ஜி கிடைக்கும்.

கடிபட்ட இடத்தில் எரிச்சல் இருந்தால் அதை குறைக்க படிகாரத்தை வைத்து தேய்ப்பார்கள். எலுமிச்சை, தேங்காய் உள்ளிட்ட பொருட்கள் இருக்கும். மஞ்சளை எடுத்து அதை கடிபட்ட இடத்தில் பூசிக்கொள்வார்கள். இதனால் கடிபட்ட இடத்தில் ஏதேனும் கிருமிகள் இருந்தால் அது அழிந்துவிடும்.

எட்டுக்கால் பூச்சி போன்றவை கடித்திருந்தால் தேங்காயின் தண்ணீரையும், தேங்காய் சில்லையும் கடித்து மென்று உண்ண சொல்வார்கள். இதனால் விஷமுறிவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இப்படியாக பல விஷ கடிக்கு முதலுதவி பெட்டகமாக விளங்கிய எலுமிச்சை பச்சை மிளகாய், தேங்காய் போன்றவற்றையை  தான், நாம் இன்று திருஷ்டி என்று வீட்டு வாசலில் தொங்க விட்டுக் கொண்டிருக்கிறோம்.

இனியாவது நாமும் அதை முதலுதவி பெட்டகமாக பயன்படுத்துவோம். நம் முன்னோர்களின் அறிவியலை  மூடநம்பிக்கையாக பார்க்காமல் அறிவியலாக பார்ப்போம்.

 

Categories

Tech |