இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுத்துள்ளது.
தமிழகத்திற்கு வடகிழக்கிலிருந்து மீண்டும் காற்று வீசத் தொடங்கி இருப்பதால் தமிழகத்திற்கு அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் அலெர்ட் கொடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
தற்போது சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. ஆதம்பாக்கம், அடையாறு, மடிப்பாக்கம், ராயப்பேட்டை, வேளச்சேரி, டி நகர் போன்ற பல்வேறு பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வரும் கூடிய நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு ஓரிரு நாட்களில் கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.