கர்நாடகாவில் குமாரசாமி அரசின் ஆட்சி கவிழ்ந்ததைடுத்து எடியூரப்பா ஆளுநர் வஜூபாய் லாலாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவையில் 3 நாட்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெற்று வந்த நிலையில் இன்று விவாதம் நடந்து முடிந்து, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 7: 15 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் மதசார்பற்ற ஜனதா தள – காங்கிரஸ் கட்சிக்கு 99 வாக்குகள் மட்டுமே பதிவானது. குமாரசாமி அரசுக்கு எதிராக 105 வாக்குகள் பதிவானது. இதனால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. முதலமைச்சர் பதவியை இழந்தார் குமாரசாமி.
இதையடுத்து பாஜக மூத்த தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான எடியூரப்பா பா.ஜ.க ஆட்சியமைப்போம் என்று தெரிவித்துள்ளார். இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார். எடியூரப்பாவிற்கு போதிய எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கிறது. இதை தொடர்ந்து ஆளுநர் வஜூபாய் லாலாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்த நிலையில் கர்நாடக ஆளுநரை குமாரசாமி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.