இன்று நான்காவது முறையாக எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்க இருக்கின்றார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்றைய தினம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சிறிது நேரத்துக்கு முன்பாக அவசரஅவசரமாக சென்று எடியூரப்பா ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதன் பிறகு அந்த பதவி ஏற்பு விழா இன்று மதியம் 12 30 மணிக்கு நடை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மாலை 6.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.இதில் முதல் கட்டமாக எடியூரப்பா மட்டும் முதல்வராக பதவியேற்றுக் கொள்கின்றார்.
பின்னர் அடுத்த வாரத்தில் அமைச்சரவை ஒவ்வொருவராக பதவியேற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முதல்வர் பதவி ஏற்பு என்பதால் கர்நாடகாவில் உள்ள மூத்த தலைவர்கள் கலந்து கொள்வதற்காக அவசரஅவசரமாக பெங்களூர் நோக்கி வந்து கொண்டு கொண்டிருக்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளும் தற்போது தான் வந்து அவசரஅவசரமாக செய்யப்பட்டு இருக்கிறது.
ஒரு மாநில முதல்வருடைய பதவியேற்பு விழா ஒரு சில தினங்களுக்கு முன்பாகவே அறிவிக்கப்பட்டு அதில் அண்டை மாநில முதல்வர்கள் , தலைவர்கள் பங்கு கொள்வது வழக்கமான ஓன்று. ஆனால் தற்போது பாஜக சார்பில் கர்நாடகாவில் அவசரஅவசரமாக ஆட்சி அமைப்பதற்கு இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில மணிநேரத்தில் பாஜகவின் மூத்த தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்து இதற்கு விளக்கம் அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.