நடிகை யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் வருத்தமடைந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். மேலும் இருட்டு அறையில் முரட்டு குத்து எனும் திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். சமீபத்தில் இவரது கார் விபத்தில் சிக்கி இவரது தோழி உயிரிழந்த சம்பவம் மிகவும் சர்ச்சையானது.
இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த யாஷிகா தற்போது மெல்ல மெல்ல உடல் நலம் தேறி வருகிறார். இந்நிலையில் அவர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்க்கும் அவரது ரசிகர்கள் பலரும் யாஷிகாவின் நிலைமையை கண்டு வருத்தமடைந்த சீக்கிரம் அவர் உடல்நலம் குணமாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
My strength ❤️🩹🐶 pic.twitter.com/6sExSvWud2
— Yashika Anand (@iamyashikaanand) September 12, 2021