கைபேசி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 117 கோடியாக அதிகரித்துள்ளது என்று இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
இன்று செல்போன் இன்றி தனியொருவர் யாருக்கும் பொழுது போகாது என்பது உண்மையே. ஒரு தனக்கென்று 1 இல்ல 4 செல்போன் வரை வைத்து பயன்படுத்துவதை நாம் பார்த்துள்ளோம். தனிமையில் இருக்கும் ஒருவர் கையில் செல்போன் இருந்தால் அவர்களுக்கு நேரம் செல்வதே அந்தவகையில் மனித வாழ்க்கையோடு பிரிக்க முடியாத ஒரு இடத்தை செல் போன் பிடுத்துள்ளது.
அண்மையில் செல் போன் சேவைக்குகளை கண்காணிக்கும் இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் கைபேசி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 117 கோடியாக அதிகரித்துள்ளது என்றும் , நடப்பாண்டு ஜூலையில் 116.83 கோடியாக இருந்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை ஆகஸ்ட் மாத இறுதியில் 117.1 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது. ஒட்டுமொத்த தொலைபேசி பயனார்கள் எண்ணிக்கையில் இது 98 சதவீதமாகும் என்றும் தெரிவித்துள்ளது.