அதிமுகவில் உட்கட்சி பூசல் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம், ஆகியோரின் யார் பக்கம் இருப்பது என தெரியாமல் கட்சித் தொண்டர்கள் விழித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் புதுக்கோட்டையில் நடந்த ஐடி ரெய்டு அதிமுகவில் புதிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ரெய்டு இருக்க ஆளான நபர் நெடுஞ்சாலைத்துறை அரசு ஒப்பந்ததாரர். அவர் பெயர் பாண்டிதுரை. நெடுஞ்சாலைத்துறை இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்து உதவிக்கோட்ட அலுவலக உதவியாக பதிவு உயர்வு பெற்று அதிமுக ஆட்சியில் செல்வாக்கு பெற்ற நபராக வளர்ந்துள்ளார் ஹை இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த அவர் அப்போதைய முதல்வர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அதனை தொடர்ந்து ஒரு கட்டத்தில் இவருடன் ஏற்பட்ட நெருக்கமானது நெடுஞ்சாலை துறையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கிடைக்க வழி வகுத்ததாக கூறப்படுகிறது. மேலும் துணை முதல்வராக இருந்த ஓ பன்னீர் செல்வத்துடனும் நெருக்கமாக இருந்திருக்கிறாராம். இவ்வாறு கிடைத்த பல்வேறு அரசு ஒப்பந்தங்கள் மூலம் அதிகப்படியான சொத்து சேர்த்திருக்கிறார். சொந்த ஊரான புதுக்கோட்டையில் தொடங்கி கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு, தோட்டம் உள்ளிட்ட சொத்துகளை வாங்கி குவித்திருப்பதாக தெரிகிறது.
இந்த விஷயங்கள் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்து வந்த வருமானத்துறை சோதனையில் இறங்குவதற்கு தக்க சமயம் பார்த்து வந்தனர். இந்நிலையில்தான் இரு தினங்களுக்கு திடீரென ரெய்டில் இறங்கினர். புதுக்கோட்டை பெரியார் நகரில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் நள்ளிரவு வரை நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இதன் மூலம் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தோப்பு, வணிக வளாகங்கள் என ரூ.1000 கோடிக்கு மேல் சொத்துக்கள் வாங்கி குவித்தது கண்டறியப்பட்டது. நேற்றைய தினம் இரண்டாவது நாளாக சோதனை நடத்தப்பட்டதில் அதிமுக ஆட்சியின்போது போடப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றினர். அதில் உறவினர்கள், பினாமிகள் மூலம் நடத்தி வந்த நிறுவனங்கள் மூலம் ரூ.5 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை பெறுவதாக கூறப்படுகிறது. சாதாரண ரோடு ரோலர் ஓட்டுநரின் மகனாக இருந்த பாண்டித்துரை அரசு ஒப்பந்ததாரராக மாறி பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை குறுகிய காலத்தில் சேர்த்துள்ளார். அதுவும் இவரது வளர்ச்சி என்பது கடந்த அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் நடந்திருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாண்டித்துரை செய்த முறைகேடுகள் அனைத்து நெடுஞ்சாலை துறை சம்பந்தப்பட்டது என்பதால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிலும் பாண்டித்துரை வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் அடுத்த கட்ட விசாரணை வருமானவரித்துறை அதிகாரிகள் முடக்கிவிடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி விசாரிக்கப்பட்டால் அதிமுகவின் பெரும் புள்ளி வரை விசாரணை நீர்வதற்கு வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.