டெல்லி உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை ஒரு மனு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, நடப்பாண்டில் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் அதற்கான ரிசல்ட் அனைத்தும் வெளியானது. இந்த தேர்வில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு 93 மதிப்பெண்கள் கட் ஆப் ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த பிரிவை சேர்ந்த உதயகுமார் என்ற மாணவர் 92 மதிப்பெண்கள் பெற்று எடுத்ததால் தனக்கு கருணை அடிப்படையில் தான் விடையளிக்காமல் விட்ட தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என தேசிய தேர்வு முகமை ஆணையத்துக்கு மனு அனுப்பி இருந்தார். இந்த மனு தேசிய தேர்வு முகமை ஆணையத்தால் ஏற்கப்படாத நிலையில் உச்சநீதிமன்றத்தில் உதயகுமார் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மாணவருக்கு கருணை அடிப்படையில் 4 மதிப்பெண்கள் வழங்குமாறு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு தற்போது தேசிய தேர்வு முகவை ஆணையமானது எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு இதுபோன்று ஒரு மாணவருக்கு கருணை மதிப்பெண் வழங்கினால் இதே நிலை தொடர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் உயர் நீதிமன்றத்தில் உத்தரவின்படி மனுதாரர் 4 மதிப்பெண்களை பெறுவதற்கு தகுதியானவர் என்பது போன்று தோன்றவில்லை. எனவே நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனவும், 2 வாரத்திற்குள் எதிர் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார். மேலும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடைவிதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.