Categories
தேசிய செய்திகள்

நீரவ் மோடி, மெகுல், மல்லையாவின் பெயர்களை பேரேட்டில் எழுதி கடன்களை வசூலிக்கவும் – ப. சிதம்பரம் ட்வீட்!

ரிசர்வ் வங்கி நீரவ் மோடி, மெகுல், மல்லையாவின் பெயர்களை பேரேட்டில் எழுதி கடன்களை வசூலிக்க வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

65 ஆயிரம் கோடி ரூபாயை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தள்ளுபடி செய்ததாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் தான் கேள்வி எழுப்பியதாகவும் இதற்கு நிதியமைச்சர் பதில் அளிக்கவில்லை என்றும் ராகுல்காந்தி நேற்று கூறியிருந்தார். ரிசர்வ் வங்கி வெளியிட்ட கணக்கு நீக்கல் பட்டியலில் நிரவ் மோடி, மெகுல் சோக்சி உள்பட பாஜகவின் நண்பர்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இதனால்தான் நாடாளுமன்றத்தில் உண்மை மறைக்கப்பட்டிருக்கிறது என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார்.

இதுகுறித்து விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர், ஒரு நையா பைசா கூட மத்திய அரசு தள்ளுபடி செய்யவில்லை என்று கூறினார். மேலும் கணக்கில் இருந்து நீக்குதலுக்கும், தள்ளுபடிக்கும் நிறைய வேறுபாடு உள்ளதாகவு இந்த வேறுபாடு குறித்து ப.சிதம்பரத்திடம் சிறப்பு வகுப்புக்கு சென்று ராகுல்காந்தி பாடம் கற்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ப. சிதம்பரம்,

ரூ.68,000 கோடி கடனை வங்கிகள் தள்ளுபடி செய்ததா, நிறுத்தி வைத்ததா என்பது ஏட்டுச் சுரைக்காய் விவாதம் என குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கைகளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுபவர்கள் நீரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா தான். மத்திய பாஜக அரசு செய்த மாபெரும் தவறை திருத்த ஒரே ஒரு வழி தான் உள்ளது. ரிசர்வ் வங்கி 3 பேரின் கடன்களை வாராக்கடன் என பேரேட்டில் எழுதி கடன்களை வசூலிக்கும் முயற்சிகளை முடுக்கிவிடுக என உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |