ஜெய்யின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் சிம்பு கலந்து கொண்டு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான பகவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் ஜெய். இதை தொடர்ந்து சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு என ஹிட் படங்களை கொடுத்த அவர் தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கிறார்.
ஜெய் தற்போது பிரேக்கிங் நியூஸ்,எண்ணித் துணிக, பார்ட்டி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் சிவ சிவா என்னும் படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாக உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் தன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
அப்போது அவருக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் முன்னணி நடிகர் சிம்பு கலந்து கொண்டுள்ளார். இதனை ஜெய் தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது ஜெய் மற்றும் சிம்பு சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
It was totally Unexpected and a Pleasant Surprise..
It means a lot to me that you took the time to come by..
Thank you for making my Birthday Extra Special… @SilambarasanTR_ #Nanban pic.twitter.com/yvO8tAS2Ps— Jai (@Actor_Jai) April 6, 2021