Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!… சூப்பர்….. தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் “கண்தானம் செயலி” தொடக்கம்…. இது வேற லெவல்பா….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வம்சி இயக்க, தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில், கடந்த நவம்பர் மாதம் நடிகர் விஜய் பனையூரில் உள்ள விஜய் மக்கள் மன்ற அலுவலகத்தில் வைத்து ரசிகர்களை சந்தித்து பேசினார். இதேபோன்று அண்மையிலும் நடிகர் விஜய் ரசிகர்களை பனையூரில் உள்ள அலுவலகத்தில் வைத்து சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் இறுதியில் மக்கள் தேவைகளை வீடு தேடிச் சென்று கேட்டறிந்து பூர்த்தி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.‌

இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தற்போது புதிதாக “தளபதி விஜய் விழியகம்” என்ற பெயரில் கண் தானம் செயலி தொடங்கப்பட்டுள்ளது. இந்த செயலியை விஜய் மக்கள் இயக்க அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொடங்கி வைத்தார். இந்த செயலியின் மூலம் கண்தானம் செய்ய விரும்புபவர்கள் தங்களுடைய விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். இந்த செயலி மூலம் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கு உதவி செய்யலாம். மேலும் இதற்கு முன்பாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் குருதிக்கொடை செயலி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |