தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருவதோடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால்சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார். அதன் பிறகு கடந்த 20 வருடங்களுக்கு முன்பாக நடிகர் ரஜினிகாந்த் தானே தயாரித்திருந்த நடித்த பாபா படத்தை மீண்டும் ரீ-ரீலீஸ் செய்வதற்கு திட்டமிட்டுள்ளார். இதற்காக நடிகர் ரஜினி டப்பிங் பேசியுள்ளார். அதன் பிறகு டோல்பி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக பாபா படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர் ரகுமானும் இசையமைப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் இசை புயல் ஏ.ஆர் ரகுமான் நடிகர் ரஜினியை அவருடைய வீட்டில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது நடிகர் ரஜினி மற்றும் அவருடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோருடன் இணைந்து ஏ.ஆர் ரகுமான் செல்ஃபி எடுத்துள்ளார். இந்த போட்டோவை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்து இரண்டு அற்புதமான மனிதர்களின் சந்திப்பின்போது என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படமானது தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.