ஆசிய திரைப்படங்களுக்கான “ஏசியன் அகாடமி கிரியேட்டிவ் விருதுகள்” ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டிற்கான ஏசியன் அகாடமி கிரியேட்டிவ் விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த விருதில் 16 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு மொழி படங்கள் கலந்து கொண்டது. இதில் சிறந்த படம், சிறந்த தொழில்நுட்ப இயக்குனர், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குனர் போன்ற பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இந்தியாவைச் சேர்ந்த குரு சோமசுந்தரத்திற்கு சிறந்த முன்னணி நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் வெளியான மின்னல் முரளி என்ற திரைப்படத்திற்காக குரு சோமசுந்தரத்திற்கு விருது வழங்கப்பட இருக்கிறது.
கடந்த 2011-ம் ஆண்டு தமிழில் வெளியான ஆரண்ய காண்டம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் குரு சோமசுந்தரம். அதன் பிறகு கடல், பாண்டியநாடு, ஜிகர்தண்டா, தூங்காவனம், கோகினூர், போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு இவர் நடிப்பில் வெளியான ஜோக்கர் என்ற திரைப்படம் தான் ரசிகர்கள் மத்தியில் தனி அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது. இவர் தற்போது மலையாள சினிமாவிலும் கலக்கி வருகிறார். மேலும் சிறந்த முன்னணி நடிகருக்கான விருது பெற்ற குரு சோமசுந்தரத்திற்கு தற்போது திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.