அலர்ஜி சார்ந்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அமெரிக்க மருந்தியல் நிபுணர்கள் மருந்து ஒன்றை கண்டறிந்துள்ளார்கள்.
குழந்தைகளை அறிகுறியில்லாத மற்றும் லேசான கொரோனா பாதித்த சில வாரங்கள் கழித்து பல விதமான அலர்ஜி சார்ந்த நோய்கள் அவர்களுக்கு ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த கொரோனா தாக்கத்தால் ஏற்படும் அதிகமான காய்ச்சல் மற்றும் அலர்ஜியால் உடலின் பல முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் மேல் குறிப்பிட்டுள்ள அலர்ஜி சார்ந்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 முதல் 17 வயதுக்குட்பட்ட 4 குழந்தைகளுக்கு லாராசோடைடு என்ற மருந்தை வழங்கி பரிசோதனை செய்துள்ளார்கள்.
அதில் அந்த குழந்தைகளின் உடல் நிலையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆகையினால் இந்த லாராசோடைடு மருந்தை அலர்ஜி சார்ந்த கொரோனா தொற்றுக்கு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள துணை சிகிச்சையாக வழங்கலாம் என்று அமெரிக்க மருந்தியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்கள்.