தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் அஜித், விஜய், விக்ரம், ரஜினி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவிலும் கொடிகட்டி பறக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது நானியுடன் இணைந்து தசரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு தமிழில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து மாமன்னன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் அண்மையில் வெளியான சாணிக்காயிதம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போது ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். சிவப்பு நிற புடவையில் இருக்கும் கீர்த்தி சுரேஷின் அழகிய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.