இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் “காந்தாரா” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் குவித்து வருகின்றது.
கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளிவந்து பெரும் வரவேற்பையும், வசூலையும் குவித்து வரும் படம் “காந்தாரா”. தமிழில் “பொன்னியின் செல்வன்” திரைப்படம், ஹிந்தியில் “விக்ரம் வேதா” போன்ற படங்கள் மற்ற மாநிலங்களில் அதிக தியேட்டர்களில் வெளியானதால் “காந்தாரா” திரைப்படத்தை அப்போது கர்நாடகா தவிர பிற மாநிலங்களில் சரியாக வெளியிட முடியவில்லை.
கடந்த வாரம் முதல் கன்னட பதிப்பு கர்நாடகா தவிர பிற மாநிலங்களிலும் வெளியானது. இருப்பினும் இந்தத் திரைப்படத்தை அந்தந்த மாநில மொழிகளில் ரசிகர்கள் பார்த்தால் வசூல் அதிகம் கிடைக்கும் என திட்டமிட்ட படக்குழுவினர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் அக்டோபர் 14 ஆம் தேதி ஹிந்தியிலும், அதைப் போன்று அக்டோபர் 15 ஆம் தேதி தமிழ், தெலுங்கிலும் வெளியிடுகின்றனர். இதற்கு முன்னதாக தமிழில் 16 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர். பின்னர் மாற்றிவிட்டது. இதனை அடுத்து மலையாள மொழி வெளியீடு பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை. மேலும் கன்னடத்தில் கிடைத்த வரவேற்பைப் போலவே மற்ற மொழிகளிலும் கிடைக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.