“தலைவி” பட பாடலுக்கு பிருந்தா மாஸ்டர் நடனமாடியுள்ள வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி “தலைவி” என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடித்துள்ளார்.
மேலும் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத் திரைப்படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி இப்படத்தில் இடம்பெற்றுள்ள மழை மழை எனும் முதல் பாடல் வெளியானது. இந்நிலையில் பிரபல நடன மாஸ்டர் பிருந்தா இப்பாடலுக்கு நடனமாடி அதை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Beautiful and gorgeous Kangana dancing so gracefully and bringing out the best as Jaya amma. Huge fan of Jaya amma. #Thalaivithemovie Let’s all do the #hookstepchallenge and see the best ones!!
This is mine!! @KanganaTeam pic.twitter.com/N3jci6P4Wq— Brindha Gopal (@BrindhaGopal1) April 3, 2021