Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!… சிவப்பு நிற உடையில் வருங்கால கணவருடன் ஜொலிக்கும் ஹன்ஷிகா…. இப்பவே கல்யாண கலை வந்துட்டு போலயே…..!!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா. இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் மகா என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. நடிகை ஹன்சிகா மோத்வானி தன்னுடைய பிசினஸ் பார்ட்னரும், நீண்ட நாள் நண்பருமான சோகேல் கத்தூரியாவை காதலித்து திருமணம் செய்ய‌ இருக்கிறார். இவர்களுடைய திருமணம் டிசம்பர் 4-ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள பழங்கால அரண்மனையில் வைத்து பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

அதன் பிறகு டிசம்பர் 3-ம் தேதி மெஹந்தி பண்டிகையும் ஜெய்ப்பூர் அரண்மனையில் வைத்து தான் நடைபெறுகிறது. இந்நிலையில் ஹன்சிகா மற்றும் சோகேலுக்கு சங்கீத் பண்டிகை மும்பையில் வைத்து நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஹன்சிகாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு, தற்போது இருந்தே கல்யாண கலை முகத்தில் வந்து விட்டதாகவும் கூறி வருகிறார்கள்.

Categories

Tech |