உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும். அந்த வகையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஆரோக்கிய அன்னை பேராலயத்திலும் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆலயத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவார்கள். அதன் பிறகு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் வேளாங்கண்ணி கோவிலுக்கு வருவார்கள்.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை தற்போது நெருங்கி வருவதால் ஆலயத்தின் சார்பில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தேவாலயம் முழுவதும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கண் கவர் மின்விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டுள்ளது. மேலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.