அஸ்வின் நேற்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவில் வந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘குக் வித் கோமாளி’. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அஸ்வின். இவரை இன்ஸ்டாகிராமில் சுமார் 3 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். அதிலும் இவருக்கு பெண் ரசிகைகள் தான் அதிகம்.
இவர் ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் ‘என்ன சொல்லப் போகிறாய்’. அறிமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்கிய இந்த படத்தில் அவந்திகா மிஸ்ரா, தேஜஸ்வினி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இதனையடுத்து, அஸ்வின் நேற்று தனது 31வது பிறந்த நாளை கொண்டாடினார்.
இவருக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில் இவர்களின் வாழ்த்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அஸ்வின் நேற்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவில் வந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார். அதில், உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி. முதலில் நான் ஒரு ஆடியன்ஸ். எல்லாருக்கும் தனித்தனியாக நன்றி தெரிவிக்க முடியவில்லை என்பதால் தான் இந்த லைவ் என அஸ்வின் கூறியுள்ளார்.