Categories
பல்சுவை

wow: ரூ.6000 கேஷ்பேக் சலுகை…. ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ‘மேரா பெஹ்லா ஸ்மார்ட்போன்’ எனும் திட்டத்தை அறிவித்து கேஷ்பேக் சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின்  புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ. 6000 வரை கேஷ்பேக் பெற முடியும். இந்த சலுகையை பெற வாடிக்கையாளர்கள் மாதம் குறைந்தபட்சம் ரூ. 249 அல்லது அதற்கும் அதிக தொகை கொண்ட சலுகைகளுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.  குறைந்தபட்சம் ரூ. 12 ஆயிரம் அல்லது அதற்கும் அதிக விலை கொண்ட புதிய ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது.

இந்த சலுகை அதிகபட்சம் 150 ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு பொருந்தும். ரூ. 6 ஆயிரம் கேஷ்பேக் தொகை இருவழிகளில் வழங்கப்படுகிறது. 18 மாதங்கள் ரீசார்ஜ் செய்ததும் முதல் தொகையாக ரூ. 2 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படும். மீதமுள்ள ரூ. 4 ஆயிரம் கேஷ்பேக் 36 மாதங்கள் ரீசார்ஜ் செய்ததும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |