Categories
தேசிய செய்திகள்

WOW: ரூ.25,000-அனைத்து பள்ளிகளிலும் அறிவிப்பு… அரசு அதிரடி…!!!

பீகார் மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 25 ஆயிரம் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் கல்லூரிகளும் முழுமையாக திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பீகார் மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெரும் மாணவிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அனைத்து பள்ளிகளிலும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் பட்டப்படிப்பு முடிக்கும் பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.

Categories

Tech |