நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த டச்சு திரைப்பட டிரைக்டர் ஆன ஃபிரான்ஸ் ஹோஃப்மீஸ்டர் என்பவர் தனது மகள் பிறந்ததிலிருந்து இளம்பெண்ணாக மாறும் வரை எடுத்த போட்டோக்களை டைம்லேப்ஸ் வீடியோவாக youtube தளத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு பதிவேற்றம் செய்திருந்தார். சுமார் 2.4 கோடிக்கு மேற்பட்ட வியூஸ்களை பெற்ற அந்த வீடியோ இப்போது ரெடிட் தளத்தில் பகிரப்பட்டு பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
ஃபிரான்ஸ் தன்னுடைய மகள் பிறந்ததிலிருந்து வீட்டின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்க செய்து வாரவாரம் அதே பேக்கிரவுண்டில் வைத்து போட்டோ எடுத்து வந்திருக்கிறார். அந்த போட்டோக்களை வைத்து டைம்லேப்ஸ் வீடியோவாக மாற்றி அதனை யூடியூபில் பதிவேற்றி இருக்கிறார். அந்த வீடியோ பதிவில் “மனித வாழ்வின் மிக மர்மமான, ஆழமான செயல்முறைகளில் ஒன்றுக்கு இப்போது நீங்கள் சாட்சியாக இருக்கப்போகிறீர்கள். வெறும் ஐந்தே நிமிடங்களில் வளரும் செயல முறையை காணப் போகிறீர்கள் ” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது