அதிகரித்து வரும் பொருளாதார பாதுகாப்பின்மை காரணமாக மக்கள் பாதுகாப்பான மற்றும் நல்ல வருமானமுள்ள இடத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். நீங்கள் அதுபோன்ற முதலீட்டு விருப்பத்தையும் தேடுகிறீர்கள் என்றால், தபால் அலுவலகம் மாதாந்திர வருமானத் திட்டம் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இவற்றில் முதலீட்டின் மீதான ரிஸ்க் குறைவு மற்றும் லாபம் நன்றாக இருக்கிறது. இதனால் தபால் அலுவலகம் மாதாந்திர வருமானத் திட்டம் பற்றி நாம் தெரிந்துகொள்வோம்.
பெயருக்கு ஏற்றாற்போன்று இது ஒரு மாதம் வருமானத் திட்டமாகும். இத்திட்டத்தின் வாயிலாக உங்கள் பணத்தை முழு உத்தரவாதத்துடன் வட்டியுடன் திரும்பப் பெறலாம். தபால் அலுவலகத்தின் இத்திட்டத்தில் ஆண்டு வட்டி 6.6 % கிடைக்கும். இதனுடைய மெச்சூரிட்டி காலம் 5 வருடங்கள் ஆகும். அந்த வகையில் 5 வருடங்களுக்கு பின் நீங்கள் உத்தரவாதமான மாத வருமானத்தைப் பெறத் தொடங்குவீர்கள். மொத்தம் ரூபாய் 4.5 லட்சத்தை டெபாசிட் செய்தால் 5 வருடங்களுக்கு பின் ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 29,700 கிடைக்கும்.
இதனிடையில் நீங்கள் மாதந்தோறும் வருமானம் பெற விருப்பப்பட்டால், நீங்கள் மாதத்திற்கு ரூபாய் 2475 சம்பாதிக்கமுடியும். தபால் அலுவலக மாதாந்திர வருமானத்திட்டத்தின் கீழ் 1000 ரூபாய்க்கு மட்டுமே கணக்கு துவங்க முடியும். 18 வயது முடிந்த யாரும் இந்த கணக்கைத் திறக்கலாம். ஒரு நபர் ஒரே நேரத்தில் அதிகபட்மாக 3 கணக்கு வைத்திருப்பவர்களுடன் கணக்கைத்தொடங்கலாம்.
திட்டத்தின் விதிமுறைகள்
இக்கணக்கைத் திறப்பதற்கான ஒரு நிபந்தனை என்னவெனில், உங்கள் வைப்புத்தொகையை 1 ஆண்டுக்கு முன் எடுக்க முடியாது. மற்றொரு புறம் அதன் முதிர்வு காலம் முடிவதற்குள் அதாவது 3 முதல் 5 வருடங்களுக்குள் நீங்கள் அதை திரும்பப்பெற்றால், அசல் தொகையில் 1 % கழித்த பின் திருப்பித் தரப்படும். அத்துடன் மறுபுறம் முதிர்வு காலம் முடிந்ததும் நீங்கள் பணத்தை எடுத்தால், திட்டத்தின் அனைத்து நன்மைகளையும் பெறுவீர்கள். அதன்பின் அஞ்சல் அலுவலகத்தினுடைய மற்றொரு நல்லவிஷயம் என்னவெனில், இவை பாதுகாப்பான முதலீட்டு சேனல்களில் ஒன்றாக இருப்பதால்தான் பலர் நம்புகிறார்கள்.