Categories
உலக செய்திகள்

WOW: புது மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தலீபான் தளபதி…. எப்படின்னு தெரியுமா?….!!!!

ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிரான கிளர்ச்சியில் தலீபான் பயங்கரவாதிகள் பல வருடங்களாக ஈடுபட்டு வந்தனர். இதனிடையில் அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையில் நேட்டோ படைகள் களமிறங்கியது. இப்போரில் லட்சக்கணக்கான மக்கள் வீடுகள், உடைமைகளை இழந்து விட்டனர். மேலும் பல பேர் அகதிகளாக வெளியேறினர். இந்நிலையில் அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சென்ற 2021 ஆம் வருடம் ஆகஸ்டில் படைகள் முழுதும் திரும்ப பெறப்பட்ட பின், தலீபான் பயங்கரவாதிகளின் வசம் ஆட்சி சென்றது. அதன்பின் அந்நாட்டிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் வாழ்வை தேடி புலம்பெயர்ந்து வருகின்றனர்.

இதற்கிடையில் தலீபான்கள் ஆட்சிக்கு வந்ததும் பெண்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு புது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் நாட்டில் முன்னாள் பாதுகாப்பு படை வீரர்கள் விட்டுசென்ற ஆயுதங்களை, அந்நாட்டின் ஜபுல் மாகாணத்திலுள்ள ஆயுத சந்தைகளில் தலீபான் தளபதிகள் விற்பனை செய்து உள்ளனர். ஜபுலில் தலீபான் தளபதிகளால் விற்கப்பட்ட அந்த ஆயுதங்களில் பல்வேறு ரகசிய முறையில் பாகிஸ்தானுக்கு கடத்தப்படுகிறது எனவும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது. இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டு உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள தகவலில், தலீபான்களின் ஹக்கானி பிரிவின் தளபதியாக இருந்து வருபவர், தன் புது மனைவியை ஹெலிகாப்டர் ஒன்றில் வைத்து அழைத்து வந்துள்ளார் என தெரிவித்துள்ளது.

அத்தளபதி கோஸ்ட் மாகாண பகுதியில் வசித்து வருபவர் ஆவார். அவருடைய மனைவி, ஆப்கானிஸ்தானின் கிழக்கே லோகர் மாகாணத்தில் பர்கிபராக் மாவட்டத்திலுள்ள ஷா மஜார் பகுதியை சேர்ந்தவர் ஆவார். இதுகுறித்து வெளியான வீடியோ ஒன்றில் புது மனைவியை தளபதி ராணுவ ஹெலிகாப்டரில் சொந்த ஊருக்கு அழைத்துவரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த ஹெலிகாப்டரானது தளபதியின் வீடு அருகில் தரையிறங்கும் காட்சிகளும் இருக்கிறது. இது தவிர தன் மாமனாரிடம் அந்நாட்டு மதிப்பின்படி 12 லட்சம் ஆப்கானிய கரன்சிகளை வரதட்சணையாக வழங்கிய தளபதி அவரது மகளின் கரம்பற்றியுள்ளார். இருப்பினும் இச்செய்தியை தலீபானின் துணை செய்தி தொடர்பாளர் காரியூசுப் அகமதி மறுத்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் போலியானவை என்று தெரிவித்துள்ளார். இருந்தாலும் சமூகஊடகத்தில் வெளியாகிய இந்த வீடியோவை பார்த்த மக்கள் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து இருக்கின்றனர். பொதுசொத்துகளை தவறாக பயன்படுத்தும் செயல் என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |