உலகம் முழுவதுமுள்ள மக்கள் தொகையில் 52.5 சதவீதம் பேர் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியினை முழுமையாகப் பெற்றுக் கொண்டுள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதன் முதலாக தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது.
இதனை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை தீவிரமாக செலுத்தி வருகிறது.
அதன்படி உலகம் முழுவதுமுள்ள மொத்த மக்கள்தொகையில் 52.5 சதவீதம் பேர் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியினை முழுமையாகச் பெற்றுக் கொண்டுள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது உலகம் முழுவதும் 410 கோடி நபர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.