ஹூவாய் நிறுவனமானது குழந்தைகளுக்கான ஸ்மார்ட்வாட்ச்சை அறிமுகம் செய்து இருக்கிறது. வாட்ச் 4 ப்ரோ என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச் வாயிலாகா வீடியோகால் கூட செய்ய முடியும். பெற்றோர் தங்களுடைய குழந்தைகளுடன் வீடியோகாலில் உரையாட உதவியாக 5 மெகாபிக்சல் ஹெச்.டி. கேமராவும் இந்த வாட்ச்சில் இடம்பெற்றுள்ளது. ஹூவாய் வாட்ச் 4 ப்ரோ மாடல் 341 பிபிஐ ஸ்கிரீன் ரெசல்யூசனுடன்கூடிய 1.41 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி இவற்றில் சில ஸ்போர்ட்ஸ் மோட்கள் இருக்கிறது.
ஸ்டெப்கவுண்டர் மற்றும் குழந்தையின் நடவடிக்கைகளையும் இதன் வாயிலாக கண்காணிக்க இயலும். குழந்தைகள் இருக்கும் இடத்தை துள்ளியமாக கண்டறிய ஜிபிஎஸ் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது. ஹூவாய்வாட்ச் 4 ப்ரோ மாடல் 800 எம்.ஏ.ஹெச் பேட்டரியை கொண்டு உள்ளது. இதை வெறும் 40 நிமிடத்தில் முழுவதுமாக சார்ஜ் செய்துகொள்ள முடியும். வரும் ஆகஸ்டு மாதம் 3ஆம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்வாட்ச் சீனாவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலையானது இந்திய மதிப்பில் ரூ.11 ஆயிரத்து 750 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.