Categories
அரசியல்

WOW: ஆட்டோவில் இப்படி ஒரு ஸ்பெஷலா?….மாஸ் காட்டும் சென்னைவாசி…. புகழ்ந்து தள்ளும் மக்கள்….!!!!

சென்னை நகரத்தில் பயணிகளின் தேவைக்காக சில வசதிகளை உடைய ஆட்டோக்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இங்கு ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தன் ஆட்டோ முழுவதையும் ஒரு ஹைடெக் வசதி கொண்ட வாகனமாக மாற்றியுள்ளார். இதன் வாயிலாக அவர் தன்னை ஒரு தொழில் முனைவோராக மாற்றிக் கொண்டுள்ளார். தொழில் முனைவோராக மாற ஒருவருக்கு ஏசி வசதி உடைய தனிஅறை மற்றும் பணியாளர்கள் இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதையும் அந்த ஆட்டோ ஓட்டுநர் நிரூபித்துள்ளார்.

“ஆட்டோ அண்ணா” என பிரபலமாக அழைக்கப்படும் அண்ணாதுரை எந்த ஒரு சாதாரண வாகனத்திலும் இல்லாத வசதிகளை தன் ஆட்டோவில் வைத்துள்ளார் எனில் அது அனைவரையும் ஆச்சரியமடைய வைக்கிறது. அதாவது இவர் தன் முழு வாகனத்தையும் கேஜெட்களைக் கொண்ட ஹைடெக் வாகனமாக மாற்றி இருக்கிறார். ஹ்யூமன்ஸ் ஆப் பம்பாய் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரது கதையை உள்ளடிக்கிய வீடியோ கிளிப் ஒன்று பகிரப்பட்டுள்ளது. இதன் வாயிலாக இவர் தன் ஆட்டோவில் வழங்கும் வசதிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த வீடியோவை மக்கள் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டியது அவசியம் ஆகும்.

https://www.instagram.com/reel/CRWQq2GBXPp/?utm_source=ig_embed&ig_rid=db6abeb2-6064-4503-93c7-8ff19353afc1

ஏனென்றால் இது மகிழ்ச்சியளிப்பது மட்டுமல்லாமல் பிறருக்கு நல்ல ஊக்கத்தையும் அளிக்கிறது. வீடியோவில், துரை நிதிநெருக்கடி காரணமாக தன் படிப்பை தொடர முடியாமல் போனது பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார். எனினும் சோர்ந்து போகாமல் அதற்கு பதில் தன்னால் முடிந்த வரை சம்பாதிக்க வேண்டும் என முடிவு செய்ததாக வீடியோ கிளிப்பில் வரும் வாக்கியங்கள் விளக்கியது. இதனையடுத்து ஆட்டோ ஓட்டும் தொழிலில் துரை இறங்கினார். அத்துடன் தன் ஆட்டோ ரிக்‌ஷாவை நகரத்தின் சிறந்த ஆட்டோவாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருந்த அவர், அதை செய்தும் காட்டி இருக்கிறார்.

அதன்படி துரையின் வாகனம் வாடிக்கையாளர்களுக்கு எதிர்பாராத அனுபவத்தையும், ஆச்சரியத்தையும் தரும் என்பதில் சந்தேகமே இல்லை. ஏனென்றால் அவரது ஆட்டோவில் முகக்கவசங்கள், சானிடைசர், ஒரு மினி-ஃப்ரிட்ஜ், ஒரு ஐபாட் மற்றும் டிவி போன்ற ஹைடெக் தொழில்நுட்ப வசதிகள் நிறைந்துள்ளது. இந்த வீடியோ சென்ற ஜூலை 15 ஆம் தேதியன்று இன்ஸ்டாகிராமில் பகிரப்படத்திலிருந்து இதுவரை 1.3 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களைப் பெற்றுள்ளது. கொரோனா நெருக்கடியால் சிரமப்படும் நிலையிலும், தன்னால் முடிந்த அளவு ஈடுபாட்டுடன் செயல்படும் ஆட்டோ ஓட்டுநர் துரையை மக்கள் புகழ்ந்துதள்ளினர்.

படிப்பை தொடர முடியவில்லை என்றாலும் தன் கனவுகளுக்கு பூட்டு போட்டுவிட்டு எதையாவது சாதிக்க துடிக்கும் துரைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி சிலர், அவரது ஹைடெக் வாகனத்தில் பயணம் செய்ய விரும்புவதாகவும், அவரது முயற்சிகள் உண்மையிலேயே ஊக்கமளிப்பதாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.கடந்த ஒன்றரை வருடங்களில் பல ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர்கள் தங்கள் வாகனத்தை மிகவும் ஆச்சரியமான வகையில் புதுப்பித்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

அதுமட்டுமின்றி கொரோனா சமயத்தில் ஆட்டோவில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வைத்து பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உதவிபுரிந்து வந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு மருத்துவமனையை அடைவதற்கு முன் சிறிது ஓய்வு கிடைக்கும் என்பதே அவர்களின் முக்கிய நோக்கமாக இருந்தது. அத்துடன் சில ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களது ஆட்டோவில் மருத்துவ முகக் கவசங்கள், சானிடைசர்கள் மற்றும் பிற கோவிட் தொடர்பான முன்னெச்சரிக்கை உபகரணங்களை வைத்து இருந்தனர். அந்த வரிசையில் ஆட்டோ ஓட்டுநர் துரையும் தற்போது இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |