Categories
Uncategorized

WOW: ஆச்சரியப்பட வைக்கும் மனித கால்குலேட்டர்…. சாதனை படைத்த இளைஞர்…. குவியும் பாராட்டு…..!!!!!

இந்தியாவின் முதல் பெண் கணிதமேதை, மனித கணினி, கால்குலேட்டரை விட வேகமாக கணக்குப் புதிர்களுக்கு விடையளிக்கும் கணிதபுலி என்று சகுந்தலா தேவி அழைக்கப்படுவார். அவரது கணிததிறமை கடந்த 1982-ம் வருடம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது.
இப்போது சகுந்தலா தேவியின் சாதனையை ஐதராபாத்தை சேர்ந்த 21 வயது இளைஞர் நீலகாந்தா பானு பிரகாஷ் முறியடித்து உள்ளார். அதாவது இளைஞர் கால்குலேட்டரை விட வேகமாக கடினமான கணக்குகளுக்கு விடை அளிக்கும் மனித கால்குலேட்டராக உருவெடுத்து இருக்கிறார்.
அண்மையில் லண்டனில் நடைபெற்ற மைண்ட் ஸ்போர்ட்ஸ் ஒலிம்பியாட் (எம்.எஸ்.ஓ) மன கணக்கீடு குறித்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் தங்கப் பதக்கம் வென்ற இந்தியர் என்ற பெருமைக்கும் இளைஞர் சொந்தக்காரராகி இருக்கிறார். இதுகுறித்து நீலகாந்தா பானு பிரகாஷ் கூறியதாவது “13 நாடுகளை சேர்ந்த 57 வயதுக்கு உட்பட்ட 29 நபர்கள் போட்டியில் கலந்துகொண்டனர். அவர்களை 65 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றேன்.
அப்போது என் கணக்கிடும் திறனையும், வேகத்தையும் பார்த்து நடுவர்கள் வியந்து போனார்கள். என் துல்லியத்தை உறுதிப்படுத்த நவீன சாதனங்களை பயன்படுத்தி பல கணக்கீடுகளை செய்ய வேண்டி இருந்தது. முன்பே 4 உலக சாதனைகளையும், 50 லிம்கா சாதனைகளையும் படைத்து உலகின் வேகமான மனித கால்குலேட்டராக என்னை அடையாளப்படுத்தி இருக்கிறேன். இதில் கால்குலேட்டரின் வேகத்தைவிட என் மூளை விரைவாகக் கணக்கிடுகிறது.
இதற்கிடையில் கணித நிபுணர்களான ஸ்காட் பிளான்ஸ்பர்க் மற்றும் சகுந்தலா தேவி போன்றோர் இத்தகைய சாதனைகளை தக்க வைத்திருந்தனர். அந்த சாதனைகளை நான் உடைத்து ருப்பது பெருமைக்குரிய விஷயம் ஆகும். உலகரங்கில் கணிதத்தில் இந்தியாவின் திறமையை நிலைநிறுத்த என்னால் முடிந்தவரை செயல்பட்டிருக்கிறேன்” என்று கூறினார். இதனால் நீலகாந்தா பானு பிரகாஷுக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கிறது.

Categories

Tech |