Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 68 லட்சத்தை தாண்டியது!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 68,38,676ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 3,97,434 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உலகம் முழுவதும் 33,29,013 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 19,65,708ஆக உயர்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 24,848 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,11,390ஆக உயர்ந்துள்ளது.

பிரேசிலில் ஒரே நாளில் 29,956 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,45,826ஆக உயர்ந்துள்ளது. பிரேசிலில் கொரோனோவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 35,040ஆக உயர்ந்துள்ளது. ரஷ்யாவில் கொரோனோவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,49,834ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 8,726 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 144 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,528ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினின் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,88,058ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 27,134 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றால் பிரிட்டனில் இதுவரை 2.83 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40,261ஆக உள்ளது.

Categories

Tech |