உலகின் முதல் இனப்படுகொலை செய்த குற்றத்திற்காக ஒரு நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
உலக நாடுகளில் சிறுபான்மையினர் தாக்கப்படுவது தொடர்ந்து நடக்கிறது. அந்த வகையில் ஈராக்கில் இருக்கும் யாஸிடி என்ற இனத்தவர்களை, ஐ.எஸ் அமைப்பினர் அழிக்க தொடங்கினார்கள். அதன்படி, ஆண்கள் 5000 பேர் கொலை செய்யப்பட்டதோடு, 7000 பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் அடிமைகளாக்கினார்.
அவ்வாறு யாஸிடி இனத்தை சேர்ந்த நோரா என்ற பெண்ணையும், அவரின் மகளையும், ஜெர்மனி நாட்டை சேர்ந்த Jennifer Wenisch மற்றும் அவரின் கணவர் Taha Al-Jumailly- அடிமைகளாக்கி கொண்டனர். Jennifer, ஐ.எஸ் அமைப்பில் இணைவதற்காக தான் ஈராக் சென்றுள்ளார். அதன் பின்பு அவர்கள் ஈராக்கில் இருந்த சமயத்தில், அந்த சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் படுக்கையில் சிறுநீர் கழித்து விட்டார்.
உடனே, Taha, அந்த சிறுமியை கடுமையாக கொதிக்கும் வெயிலில் நாய் சங்கிலியை வைத்து கட்டிப் போட்டிருக்கிறார். மேலும், சிறுமி தாகத்தால் தவித்த சமயத்திலும், தண்ணீர் கொடுக்கவில்லை. இதனால் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இவ்வாறு அவர் சித்திரவதை செய்ததை ஜெனிஃபர் வேடிக்கை பார்த்திருக்கிறார்.
ஏற்கனவே, ஜெனிபரை கைது செய்து, நீதிமன்றம் அவருக்கு பத்து வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்துவிட்டது. இந்நிலையில், Taha-விற்கு நேற்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், Taha தான், உலகிலேயே இனப்படுகொலை செய்ததற்காக தண்டிக்கப்படும் முதல் நபர். இதனை கேட்டவுடன் அவர் நீதிமன்றத்திலேயே மயங்கி விழுந்தார்.