துபாயின் பட்டத்து இளவரசரான, மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் உலகிலேயே மிகவும் ஆழமான நீச்சல் குளத்தை திறந்து வைத்திருக்கிறார்.
துபாயில் இருக்கும் நாத் அல் செபா பகுதிக்கு அருகில் மிகவும் ஆழமான நீச்சல் குளத்தை டீப் டைவ் என்னும் நிறுவனமானது வடிவமைத்திருக்கிறது. இது சுமார் 197 அடி ஆழமுடையது. இந்த நீச்சல் குளமானது சுமார் ஒரு கோடியே 40 லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு உடையது. இது சுமார் 6 ஒலிம்பிக் நீச்சல் குளத்திற்கு சமமானது.
இந்த நீச்சல் குளத்திற்குள், ஒரு நகர் இருப்பது போன்று தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். ஸ்கூபா டைவ் என்ற நீர்மூழ்கி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள வசதி செய்யப்பட்டிருக்கிறது. நீரின் அடியில் சுமார் 56 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளது. சூழ்நிலைக்கு தகுந்தவாறு நிறங்களையும், ஒளி அளவையும் வெளிப்படுத்தக்கூடிய 164 மின் விளக்குகள் ஆழமான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரே சமயத்தில், நீரின் அடியில் சுமார் 100 நபர்கள் கலந்துகொள்ளும் வகையில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் வசதியும் இருக்கிறது. துபாயின் பட்டத்து இளவரசரான, மேதகு ஷேக் ஹம் தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் இந்த நீச்சல் குளத்தை திறந்துவைத்தார்.