உலகிலேயே அதிக ஆபத்து கொண்ட விஷம், ரஷ்ய நாட்டின் அதிபரான விளாடிமிர் புடினிடன் இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.
உலகில் விஷங்கள் பல்வேறு வகைகளில் இருக்கிறது. சில வகையான விஷங்கள் மெதுவாக கொல்லக்கூடியது. சில விஷங்கள் மரணத்தை விட கொடிய வலியை தரும். இது போன்ற, விஷம் ரஷ்ய நாட்டின் அதிபரான விளாடிமிர் புடினிடம் இருக்கிறது. அவரது எதிரிகளுக்கு அவர் அதனை பயன்படுத்துகிறார் என்று கூறப்பட்டிருக்கிறது.
மிகவும் ஆபத்து நிறைந்த இந்த விசம் ஸ்ட்ரைக்னைன் என்பதாகும். இது தொடர்பில் நச்சு இயல் நிபுணரான நீல் பிராட்பரி என்பவர் தெரிவித்திருப்பதாவது, இந்த விஷம் உலகிலேயே கடும் வேதனையை தரக்கூடிய வேதிப்பொருள். இது உடலில் செலுத்தப்பட்டவுடன் கொடிய வலியை தரும்.
எலும்புகளையும், தசைகளையும் சேர்க்கக்கூடிய பிணைப்பை உடைத்து உடல் முழுக்க நடுங்கச் செய்யும். மேலும் இந்த விஷம் மிக மிக மெதுவாக செயல்படுவது தான் மோசமானது. இது செலுத்தப்பட்ட மனிதர் உயிரிழக்க பல மணி நேரங்கள் ஆகும். மேலும் இது பாதிப்படைந்தவர்களின் உணர்வுகளை இழக்கச்செய்யாது. உடலின் ஒவ்வொரு வலியையும் உணரச் செய்யும். உடலில் இருக்கும் ஒவ்வொரு தசையும் வலிக்க தொடங்கும் என்று கூறியிருக்கிறார்.