அர்ஜென்டினா நாட்டில் உலகக் கோப்பைக்கான டாங்கோ நடனப்போட்டியானது, உற்சாகமாக தொடங்கப்பட்டிருக்கிறது.
அர்ஜெண்டினா நாட்டில் டாங்கோ நடன போட்டியானது, பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான தகுதி சுற்றுகள் தலைநகரில் உற்சாகமாக தொடங்கியிருக்கிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக இணையதளத்தில் இந்த போட்டியை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இந்த வருடம் பார்வையாளர்கள் மத்தியில் நேரடியாக நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள உலக நாடுகளிலிருந்து சுமார் 500க்கும் அதிகமான போட்டியாளர்கள் வந்திருக்கிறார்கள். எனவே, பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக கண்காட்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படவிருக்கின்றன. இதற்கான இறுதிச்சுற்று வரும் 18ஆம் தேதி அன்று நடக்கிறது.