உலக நாடுகள் முழுக்க ஒட்டுமொத்தமாக சுமார் ஆயிரம் கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக நாடுகளில் தற்போது வரை மொத்தமாகக் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 37 கோடியே 40 லட்சமாக அதிகரித்திருக்கிறது. எனவே, உலகம் முழுக்க தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று நிலவரத்தின் படி உலக நாடுகள் முழுக்க ஆயிரம் கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
இதில் 425 கோடி மக்கள் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் மொத்தமாக 53% மக்கள் இரண்டாம் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர்.