கொரோனா தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்த ரஷ்யா முடிவு செய்து பரிசோதனை பணிகளை தொடங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒழிப்பதற்காக உலகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ரஷ்யா அடுத்தகட்ட நடவடிக்கையாக 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணிகளை தொடங்க இருக்கிறது.
இதற்காக 100 தன்னார்வ குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் நேற்று முன் தினம் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் அடுத்த கட்ட அலை குழந்தைகளை தாக்கும் என்ற நிபுணர்களின் எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது .