Categories
பல்சுவை

இனம், மதம், மொழி மறந்த சங்கம் – உலக செஞ்சிலுவை சங்கம்

உலகில் நடக்கும் யுத்தம் மற்றும் இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்படுபவர்களுக்கு மனிதாபிமான நோக்கத்தில் நிவாரண பணிகளை செய்யும் முகமாக செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கம் சர்வதேச அளவில் அமைக்கப்பட்டுள்ளது. செம்பிறை சங்கம் செஞ்சிலுவை சங்கம் என பெயரில் வித்தியாசத்தை கொண்டிருந்தாலும் இரண்டு அமைப்புகளும் ஒரே நோக்கத்தை முன்வைத்து செயல்படும். அரபுநாடுகளில் சிலுவை என்ற குறியீடுக்கும் வார்த்தைக்கும் மாறாக பிறை என்ற குறியீடும் வார்த்தையும் பயன்படுத்துகின்றனர்.

உலகம் முழுவதும் 178 தேசிய கிளைகள் கொண்ட இந்த அமைப்பு மனிதாபிமான பணிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. உலக செஞ்சிலுவை, செம்பிறை தினத்தின் முக்கிய கருப்பொருள் யுத்தத்தினாலும் இயற்கை சீற்றத்தினால் பாதிப்படையும் மக்களுக்கு மொழி, இனம், மதம் என்ற வேறுபாடு இன்றி உதவி செய்வதும், கருத்து வேறுபாட்டில் இருக்கும் இருதரப்பினரிடையே நடுநிலை வகித்து சமாதானத்திற்கு உதவுவதும், செஞ்சிலுவை சங்கத்தின் செயல்பாடுகள் ஆகும். இச்சங்கத்தை தொடங்கியவர் ஜீன் ஹென்றி டியூனண்ட். அவர்  பிறந்த தினமான மே 8ஆம் தேதியை அவரை கவுரவிக்க உலக செஞ்சிலுவை சங்க தினமாக உலக மக்கள் அனுஷ்டிக்கின்றனர்.

Categories

Tech |