கிராமங்களுக்குள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 35 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவில் தீவிரவாதிகள் அப்பாவி மக்களை சுட்டுத் தள்ளுவது, வீட்டுக்குள் புகுந்து திருட்டு வேலைகளில் ஈடுபடுவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வடமேற்கு மாகாணத்தில் உள்ள மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை இரவு தீவிரவாதிகள் பயங்கர துப்பாக்கி ஆயுதங்களுடன் வந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஷாம்பாராவில் மாராடூன் என்ற கிராமத்தில் உள்ள அப்பாவி மக்களை சுட்டுத் தள்ளியதோடு குடிசைகளையும் தீ வைத்து எரித்தனர். மேலும் அருகில் இருந்த நான்கு கிராமங்களுக்கும் சென்று இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி வந்தனர். இந்தத் தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.