கொரோனா தொற்று ஜெர்மனியில் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஆழமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒழிப்பதற்காக உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் ஜெர்மனியில் கடந்த சில மாதங்களாக தொற்று குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் 2,454 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட பாதிப்புகள் ஸ்பெயின் மற்றும் துருக்கி நாடுகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் மூலம் பரப்பியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெர்மனி சுகாதாரத்துறை சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதில் ஜெர்மனிக்கு விமான மூலம் வரும் சுற்றுலா பயணிகள் பரிசோதனையை சான்றிதழை கொண்டுவரவேண்டும் என்ற திட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில் தற்போது சாலை, ரயில், மற்றும் கடல் மூலம் வரும் பயணிகளும் பரிசோதனை சான்றிதழை கொண்டு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.