இந்த ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஜப்பானில் ஒலிம்பிக் கிராமம் திறக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் இந்த ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதனிடையே கொரோனா தொற்றை எதிர்கொள்ளும் வரையில் அதிக பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் கிராமம் ஒன்று உருவாக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த ஒலிம்பிக் போட்டியில் 206 நாடுகள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து 11000 விளையாட்டு வீரர்கள் போட்டியில் கலந்து கொள்வார்கள் என்றும் அவர்களுக்கு தினமும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் சர்வதேச ஒலிம்பிக்குழுவால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒலிம்பிக் கிராமத்தில் வசிப்பவர்களில் 80% மக்கள் இரண்டு தடுப்பூசி டோஸ்களை போடப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.