இத்தாலியில் படகு கவிழ்ந்ததில் கர்ப்பிணி உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியின் லம்பேடுசா தீவின் வழியாக சென்று கொண்டிருந்த அகதிகள் படகில் 60க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து தீவில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் படகு தண்ணிரில் கவிழ்ந்து எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவலறிந்த இத்தாலி கடலோர காவல் படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே 46 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் கர்ப்பிணி உட்பட நான்கு பெண்கள் மற்றும், 3 ஆண்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். மேலும் 9 பேர் கண்டுபிடிக்கப்படாததால் அவர்களின் நிலை என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.