உலக சுகாதார அமைப்பு கொரோனா காலகட்டத்திற்கு பிறகு ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையே அச்சுறுத்தி வருகிறது. இதனால் உலக நாடுகள் பலவும் தடுப்பூசி போடும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து எச்சரித்துள்ளது. அதாவது சுமார் 20 கோடிக்கும் அதிகமானோர் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனாவிலிருந்து மீண்ட பிறகு உடல் ரீதியாக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
மேலும் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு ஏற்படும் இந்த உடல் பாதிப்புகள் மிகவும் கவலையளிக்கும் விதமாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறியுள்ளார். ஆனால் எத்தனை நாட்கள் வரை இந்த பிரச்சனைகள் இருக்கும் என்பது தெரியாது. அதேசமயம் மருத்துவ உதவியை பெற்றுக் கொள்வது அவசியம். இதுகுறித்த ஆய்வுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மரியா வான் கெர்கோவ் கூறியுள்ளார்.