புதிய கொரோனா விதிமுறையால் ஒரே நாளில் பிரான்ஸில் 9 லட்சத்திற்கும் மேலானோர் தடுப்பூசிகள் போட முன்பதிவு செய்துள்ளனர்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரான்சிலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே டெல்டா கொரோனா தொற்றும் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து அரசின் அறிவியல் ஆலோசகரும், பேராசிரியருமான ஜீயன் பிரான்சிஸ் டெல்பிரைசி கூறுகையில் இந்த வைரஸ் தாக்கம் 4வது அலையை ஏற்படுத்த காரணமாகும் என்றும் இரண்டு தடுப்பூசிகளை போட்டுக்கொண்டால் இதில் இருந்து தப்பலாம் எனவும் கூறினார்.
இந்நிலையில் உணவு விடுதிகள், டாஸ்மாக்க்கு வருபவர்கள் ரயில் மற்றும் விமானங்களில் பயணிப்பவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இந்த திட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த அறிவிப்பினை தொடர்ந்து மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வந்துள்ளனர் என்றும் ஒரே நாளில் 9 லட்சத்திற்கும் மேலான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் பதிவினை செய்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.