தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளும் முடிவு பற்றிய அறிவிப்பு ஒன்றை பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒழிப்பதற்காக உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர் Olivier Véran தடுப்பூசிகள் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்த முடிவுகள் மக்களைச் சார்ந்தது என்றும் ஆனால் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு முகாம்கள் தொடர்ந்து நடைபெறும் எனவும் கூறினார். மேலும் மருத்துவதுறையில் பணிபுரியும் ஊழியர்கள் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனக் கூறினார்.