பிரான்ஸ் சுற்றுலா வரும் பயணிகளுக்கு இலவச பி.சி.ஆர் கொரோனாபரிசோதனை மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது
பிரான்ஸில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதால் சுற்றுலா பயணிகள் நாட்டுக்குள் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா வரும் பயணிகளுக்கு பிசிஆர் முறை கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அது முற்றிலும் இலவசமாக செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளது.
இதனிடையே தன் நாட்டு மக்களுக்கு செய்யப்படும் பி சி ஆர் கொரோனா பரிசோதனை உலக நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கும் செய்ய இருப்பதால் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்றும் அதனால் நாட்டின் பொருளாதாரம் உயரும் மேலும் இது கொரோனா பரவலைத் தடுக்கும் என்பதன் அடிப்படையில் இந்த முடிவு எடுத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.