பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரான்சிலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே உணவகங்கள், திரையரங்குகள், போன்ற பொது இடங்களுக்கு செல்லும் போது தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் ஒலிவியே வெரோன் உணவகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்லும்போது தடுப்புச் சான்றிதழ் கொண்டு வருவதால் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என தெரிவித்துள்ளார். மேலும் பேருந்துகள், விமானங்களில் பயணிப்போர் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.